மருத்துவமனையில் இருந்து தயாளு அம்மாள் டிஸ்சார்ஜ்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள்  கடந்த 4ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று உடல்நலம் தேறியதை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து இன்று மாலையில் தயாளு அம்மாள் நலமுடன் வீடு திரும்பினார்.

Related News

Latest News