ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் 1500 கிலோ மதிப்பிலான போலி நெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நெய் மாதிரிகளை சுகாதாரத் துறை குழு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. இந்த மோசடியில் வேறு யார் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.
கிருஷ்ணா மற்றும் அமுல் போன்ற பிரபலமான பிராண்டுகளின் லேபிள்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.