Wednesday, March 12, 2025

பிரதமர் மோடியை பார்த்து கண்கலங்கிய நபர் : ஆச்சரியத்துடன் பார்த்த பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் பிரதமர் மோடியை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். அந்த நபரின் கையில் ஒரு ஓவியம் இருந்துள்ளது.

அந்த ஓவியத்தில் பிரதமர் மோடி தனது தாயுடன் இருப்பது போல வரையப்பட்டிருந்தது. இதை பார்த்த பிரதமர் மோடி அதில் தனது கையெழுத்தையும் போட்டு கொடுத்தார். பிரதமர் மோடி மீதான இந்த சிறப்பு மரியாதை மற்றும் அன்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Latest news