Saturday, July 5, 2025

கேரளாவில் வாகனங்களை சேதப்படுத்திய மதம் பிடித்த யானை

கேரளாவில் திருவிழாவிற்காக அழைத்துவரப்பட்ட யானை மதம் பிடித்து ஓடியதில் கண்ணில் பட்ட வாகனங்களை எல்லாம் சேதப்படுத்தி துவம்சம் செய்தது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கோயில் திருவிழாவிற்காக அழைத்து வரப்பட்ட ஊட்டோளி மகாதேவன் என்ற யானை மதம் பிடித்து ஓடியது. இதை பார்த்து பயந்த பக்தர்கள் தலைத்தெறிக்க ஓடினர். மேலும், அருகில் இருந்த கார், பைக் போன்ற போன்ற வாகனங்களை சேதப்படுத்தி துவம்சம் செய்தது. பின்னர், பாகன் உள்ளிட்டோர் யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news