மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி “மும்பையில் ஒரு மொழி பேசுபவர்கள் மட்டும் கிடையாது. இங்கு ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வேறு மொழிகளை பேசுபவர்கள் இருக்கிறார்கள். எனவே நீங்கள் மும்பையில் வசித்தால் மராத்தி மொழி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்.
அவரது பேச்சுக்கு சிவசேனா (உத்தவ் தாக்கரே), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது : “ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியதை நான் கேட்கவில்லை. மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்தி தான். இங்கு உள்ள ஒவ்வொருவரும் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.