பிரபல பின்னணி பாடகி கல்பனா ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து அவரது அக்கம்பக்கத்தினர், அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாகத் தெரிவித்தனர். தற்போது அவர் குணமடைந்து வருகிறார்.
இந்நிலையில் பாடகி கல்பனாவின் மகள் தயா பிரசாத் பிரபாகர் கூறியதாவது:-
“என் அம்மா ஒரு பாடகி, எல்.எல்.பி மற்றும் பி.எச்.டி ஆகியவற்றை ஒரே நேரத்தில் படித்து வருகிறார், இது தூக்கமின்மைக்கு வழிவகுத்தது. தூக்கமின்மையை குணப்படுத்த மருத்துவர்கள் அவருக்கு ஒரு மாத்திரையை பரிந்துரைத்தனர்.
தூக்கம் வராததால் அவர் அதிகளவில் மாத்திரை எடுத்துக்கொண்டார். இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இது தற்கொலை முயற்சி அல்ல” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.