ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டங்களின் நிறத்தை ஆரஞ்ச் நிறத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டடங்களுக்கும் புதிய வண்ணக் குறியீட்டை மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒடிசா பள்ளி கல்வித் திட்ட ஆணையம், 30 மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பி.எம். ஸ்ரீ உள்பட அனைத்து பள்ளிகளின் கட்டடங்களின் நிறத்தை ஆரஞ்ச் மற்றும் பழுப்பு நிறத்துடன் கூடிய ஆரஞ்ச் நிறத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுமானம், பழுதுபார்ப்பு, புதுப்பித்தல் பணிகளின்போது அங்கீகரிக்கப்பட்ட வண்ணக் குறியீட்டை ஏற்றுக்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட களப் பணியாளர்களுக்கு பொறுத்தமான வழிமுறைகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு அக்டோபரில், மாநில பாஜக அரசு, உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் சீருடை நிறத்தையும் மாற்றியது குறிப்பிடத்தக்கது.