Friday, March 14, 2025

அனைத்து கட்சி கூட்டத்தில் தவெக : விஜய் வருவாரா?

மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

இந்த அக்கூட்டத்தில் பங்கேற்க அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் நாம் தமிழா், புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாகவும் அறிவித்தன.

இந்நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Latest news