மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் பஞ்சயாத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் என்பவர கடந்த டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கும் மாநில அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தேசியவாத காங்கிரஸைச் சோ்ந்த மாநில அமைச்சா் தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய கூட்டாளி வால்மிக் கராத் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனால் தனஞ்சய் முண்டேவை அமைச்சர் பதவியிலிருந்து விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அமைச்சர் தனஞ்சய் முண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் ஃபட்னவீஸ் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.