டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் சட்ட விரோதமாக விலங்குகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாய்லாந்து நாட்டில் இருந்து டெல்லி வந்த 3 பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது பயணி ஒருவர் சட்டவிரோதமாக பாம்புகள், பல்லிகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களை சுங்க அதிகாரிகள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.