தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆட்சியில் இருந்த போது பாலம் கட்டுமானப் பணியில் ஊழல் நடைபெற்றதாகவும் அதில் சந்திரசேகர ராவுக்கும் பெரும் பங்கு இருப்பதாகவும் ராஜலிங்க மூர்த்தி என்பவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ராஜலிங்க மூர்த்தியை சிலர், கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடினர். ராஜலிங்க மூர்த்தியின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.