நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்காக, திருச்சி நீதிமன்றத்தில் டி.ஐ.ஜி., வருண் குமார் ஆஜரானார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில், சீமானை கடுமையாக சாடி பேசினார்.
நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அதனால் எதுவும் பேச விரும்பவில்லை. சீமான் மீதான வழக்கை வாபஸ் வாங்கமாட்டேன். நான் எனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன் என்கிறார்கள். கேவலமான எண்ணம் படைத்த மனிதராக இருப்பார் என்று நினைக்கிறேன். மைக் புலிகேசியின் தரம் அவ்வளவு தான். இவ்வாறு அவர் கூறினார்.