திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் BSNL அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்து புகை வருவதை கண்ட இரவு நேர பணியாளர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில், கீழ்தளத்தில் உள்ள கம்ப்யூட்டர், பணம் எண்ணும் இயந்திரம், டிவி, ஏசி உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.