Sunday, February 23, 2025

வாகன சோதனையில் சிக்கிய 500 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஒரு சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 500 கிலோ போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து காரில் இருந்த நபர்களிடம் விசாரித்த போது அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அந்த போதை பொருட்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

போதை பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் காரில் வந்த நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news