Tuesday, January 13, 2026

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

அதிமுக ஆட்சியில் இருந்த போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி ராஜேந்திர பாலாஜி. ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 33 பேரிடம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த மாதம் இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related News

Latest News