வேலூர் காட்பாடியில், தர்மம் எடுப்பவரை கொலை செய்த வழக்கில், கேரளாவைச் சேர்ந்த பாபுஷேக் என்பவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 15-ஆம் தேதி அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற வந்த பாபுஷேக் இன்று காலை மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.