பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், சிபிஐ, அமலாக்கத்துறை போல ஆளுநரரையும் பயன்படுத்தி வருவதாக திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை ஒட்டி காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், தமிழ் சித்திரக் கதை என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்துக்களை கேட்க கூட ஆளும் பாஜக அரசிற்கு பொறுமை இல்லை என்று கூறினார்.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போல நான்காவது கரமாக, ஆளுநரை மத்தியஅரசு பயன்படுத்தி வருவதாகவும் கனிமொழி குற்றம்சாட்டினார்.