Sunday, August 31, 2025

இந்திய ரயில்வே துறையில் வேலை : 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்

இந்திய ரயில்வே துறையில் டிராக் மெஷின் உதவியாளர், பிரிட்ஜ் உதவியாளர், டிராக் மெயிண்டனர், லோகோ செட் உதவியாளர், எலக்ட்ரிக்கல் ஆபரேட்டர் என பல்வேறு பிரிவில் மொத்தம் 32,438 காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

இதற்கான கல்வி தகுதிகள் என்னவென்றால் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதேபோல் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். அடிப்படை சம்பளம் ரூ.18,000வரை வழங்கப்பட இருக்கின்றது. இப்பதவிகளுக்கான வயது வரம்பு, 01.01.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபடியாக 36 வயது உடையவராக இருக்க வேண்டும்.

இப்பணி இடங்களுக்கான கணினி வழி தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவை தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த ரயில்வே காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News