புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கல்லூரை சேர்ந்த சண்முகம் என்பவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்ற போலீசார், அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, அவர் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கஞ்சாசெடியை போலீசார் வெட்டி அழித்தனர். மேலும், கஞ்சா செடி வளர்த்து வந்த சண்முகத்தையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.