செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் முதல் மறைமலைநகர் வரை, தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி பல்வேறு விளம்பர பலகைகள் மற்றும் அரசியல கட்சி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் வாகனஓட்டிகள் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் முதல் மறைமலைநகர் வரை அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை நகராட்சி அலுவலர்கள்,போக்குவரத்து காலவர்களின் உதவியுடன் அகற்றினர். அனுமதியில்லாமல் விளம்பர பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.