சென்னையில் ஏ.சி. பெட்டியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் பெரம்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயிலை பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மக்களின் வசதிக்கேற்ப ஏசி வசதியுடன் கூடிய மின்சார ரயில் சென்னை பெரம்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது. சோதனை ஓட்டம் முடிந்த பிறகு ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.