சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைகளில் அரசு சார்பில் வாதாட புதிதாக வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக 8 பேரும், குற்றவியல் வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களாக 7 பேரும், கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக 7 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் உரிமையியல் தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் வழக்கறிஞர்களாக 16 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வழக்குகளில் அரசு தரப்பிற்கு ஆஜராகி வாதாடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.