பெரியார் குறித்து சீமான் பேசிய கருத்தால் நாம் தமிழர் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் காரணமாக அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். நேற்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் “பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் கட்சியை விட்டு வெளியேறுங்கள்” என பேசினார்.
இந்நிலையில் அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 12 பேர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.