ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடில், சிறப்பு போலீசார் எனக் கூறி நாடகமாடி பேராசிரியை வீட்டில் சோதனை நடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஆற்காடு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் லட்சுமிபிரியா. சென்னையில் பேராசிரியையாக பணி புரிந்து வரும் இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது மகன்களுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் 6 பேர் கொண்ட கும்பல் லட்சுமிபிரியாவின் வீட்டுக்குள், சிறப்பு போலீசார் எனக் கூறி நாடகமாடி சோதனை நடத்தி சென்றிருக்கின்றனர்.
சோதனைக்கு பின் வீட்டிலிருந்த லேப்டாப், செல்போன் மற்றும் தங்க நகைகள் திருடு போனது தெரியவர, லட்சுமிபிரியா போலீசில் புகாரளித்தார். இதனடிப்படையில் திவீர விசாரணை நடத்தி வந்த போலீசார், வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த ராஜசேகர் உட்பட 6 பேரை கைது செய்திருக்கும் நிலையில், லேப்டாப், செல்போன் மற்றும் 3 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.