Wednesday, March 12, 2025

டெபாசிட்டை இழந்தது நாம் தமிழர் கட்சி

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்துள்ளார்.

Latest news