தருமபுரி மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து பெட்டகங்களில் காலாவதியான பொருட்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை அடுத்த மூக்காரெட்டிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சுமார் 150 கர்ப்பிணிகளுக்கு அரசின் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், ஊட்டச்சத்து பவுடர், இரும்புச் சத்து டானிக், 500 மில்லி ஆவின் நெய், பேரீச்சம் பழம், பிளாஸ்டிக் கப் மற்றும் துண்டு ஆகியவை இருந்துள்ளன.
இதில்,பேரீச்சம்பழம் மற்றும் ஆவின் நெய் காலாவதியாகி இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணிபாரதி என்பவர் மருத்துவமனைக்கு சென்று கேட்டுள்ளார். ஆனால், செவிலியர் ஒருவர் இதனைப் பெரிதுப்படுத்த வேண்டாம் என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.