Thursday, July 3, 2025

டெல்லி மக்களின் கவனத்தை ஈர்த்த மினி கெஜ்ரிவால்

டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. தற்போது பாஜக முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் ‘மினி அரவிந்த் கெஜ்ரிவால்’ என்ற சிறுவன் டெல்லி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளான். அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு ஆம் ஆத்மி கட்சியின் தொண்டரான ராகுல் தோமர், தனது மகன் அவ்யன் தோமருடன் வந்திருந்தார். கெஜ்ரிவாலை போலவே தோற்றமளிக்க அவர் போலவே கண்ணாடி மற்றும் மீசையை அணிந்திருந்தான்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news