வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்திய கைதிகள் எண்ணிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 86 நாடுகளில் உள்ள சிறைகளில் 10,152 இந்தியர்கள் விசாரணைக் கைதிகளாகவும், தண்டனை பெற்ற கைதிகளாகவும் உள்ளனர். சவுதி அரேபியாவில் உள்ள ஜெயில்களில் 2,633 இந்திய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சிறைகளில் 2,518 இந்திய கைதிகள் உள்ளனர்.
நேபாளத்தில் உள்ள சிறைகளில் 1,317 இந்தியர்களும், பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் 266 இந்தியர்களும், இலங்கையில் உள்ள சிறைகளில் 98 இந்தியர்களும், கத்தார் சிறையில் 611 இந்தியர்களும் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.