குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபு என்பவர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல்வேறு இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளைகள் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். தற்போது டெல்லி மெட்ரோ ரெயில் பெட்டிகளில் சாமியார் ஆசாராம் பாபுவின் உருவப்படம் கொண்ட விளம்பர ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விளம்பர போஸ்டர்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வழக்கறிஞர் ஒருவர், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் உள்ள ஒரு குற்றவாளிக்கு மெட்ரோ ரயிலில் விளம்பர போஸ்டர்கள் வைத்திருப்பது வேட்க கேடு என விமர்சித்துள்ளார்.