கடந்த பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு 2025-26ம் ஆண்டின் பட்ஜெட் தாக்கல் செய்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கலில் தமிழகத்திற்கு மத்திய அரசு அவமதிப்பதை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் செங்கல்பட்டு தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு அறிவித்த பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு மத்திய அரசு விவசாயிகள், தொழிலாளர்கள்,கல்வி,வேலைவாய்ப்பு போன்ற எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என கூறி அனைத்து தொழிற்சங்கங்களை சார்ந்த தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பட்ஜெட் நகலை கிழித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.