Thursday, February 6, 2025

போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது

சென்னை மதுரவாயல் பாலத்தின் அருகே போதை மாத்திரைகளை இளைஞர்கள் கைமாற்றிக்கொள்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், மதுரவாயல் அடையாளம்பட்டு சர்வீஸ் சாலையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இளைஞரை பிடித்து சோதனை செய்தனர்.

அவரிடம் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கார்த்திக் என்ற இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 152 போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த போதை மாத்திரை வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடிவருகின்றனர்.

Latest news