Thursday, February 6, 2025

திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என, எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், ஆசிரியர்களால் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். வேலியே பயிரை மேய்ந்த இந்த கொடூர செயலுக்கு, திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு, தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு, திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என கூறியுள்ளார். மேலும், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு, உச்சபட்ச தண்டனை பெற்றுத் தருவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Latest news