Wednesday, February 5, 2025

மதுரையில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனை அனுமதி

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை பாலம் அருகே இயங்கி வரும் தனியார் ஹோட்டலில் நேற்று இரவு கிரில் சிக்கன் சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சோழவந்தான் வைகை பாலம் அருகே செயல்பட்டு வரும் தனியார் அசைவ உணவகத்தில், நேற்று இரவு சுமார் 50க்கும் மேற்பட்டோர் அசைவ உணவு சாப்பிட்டு உள்ளனர். இதில் பிரவீன் குமார் என்பவர் தனது நண்பர்களுடன் ஹோட்டலுக்கு வந்துள்ளார். அந்த ஹோட்டலில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 5 பேருக்கு உடல் உபாதை ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த ஹோட்டலுக்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அங்கு உணவு தயாரிக்கப்படும் பொருட்களின் மாதிரிகளை எடுத்துக்கொண்டு தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்ததில் சிக்கன் சாப்பிட்ட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest news