Wednesday, February 5, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வாக்குவாதம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வேளாண்மை அலுவலக கூட்டரங்கில் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், வேளாண்மை துறை அதிகாரிகள், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய உரங்கள், விதைகள் உள்ளிட்ட விவசாய பொருட்களை வேளாண்மை துறை அதிகாரிகள் சரிவர வழங்குவதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், அரசு அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் விவசாயியிடம் இருந்து மைக்கை வாங்க கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Latest news