Tuesday, February 4, 2025

எச்.ராஜாவை வீட்டு காவலில் அடைத்த போலீஸ்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்துக்கு புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை காவல்துறையினர் வீட்டுக் காவலில் அடைத்து வைத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று இந்து அமைப்பினர் தெரிவித்திருந்த நிலையில், இந்து அமைப்புகளின் தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றே காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் காரைக்கால் பண்ணை வீட்டில் இருந்து வேலுடன் போராட்டத்துக்கு புறப்பட்ட எச். ராஜாவை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவரை வீட்டிலேயே காவலில் வைத்துள்ளனர்.

Latest news