நாகை வெளிப்பாளையத்தில் பாஸ்கரன் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு வந்த ரவுடி சக்திவேல் இலவசமாக மளிகை பொருட்கள் மற்றும் மாமூல் கேட்டு கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார்.
கடையை அடித்து நொறுக்கும் காட்சிகள் அங்குள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.