Tuesday, February 4, 2025

சிறைக்கு சென்ற பிறகும் திருந்தாத திருடன், மீண்டும் சிறைக்கு அனுப்பிய போலீஸ்

திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த பிரபல இருசக்கர வாகன திருடன் சாதிக் பாஷா (65). இவர் ஏற்கனவே திருட்டு வழக்கு ஒன்றில் கைதாகி புதுச்சேரி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (30) என்பவரின் இருசக்கர வாகனத்தை சாதிக் பாஷா திருடியுள்ளார். இது குறித்து பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து இருசக்கர வாகனத்தை திருடிய சாதிக் பாஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார், காலாபட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.

Latest news