ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மைய கட்டுப்பாட்டு அறை எண்களான 0424 22421365, 0424 2242258 ஆகியவற்றையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.