தமிழகத்தில் வருகின்ற 9ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 9ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரை நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.