சென்னை போரூர் டோல்கேட் அருகே, தவெக கட்சியின் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் என்பவருக்கு வரவேற்பு அளித்து தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கிரேன் மூலம் 15 அடி அளவில் பிரம்மாண்ட மாலை அணிவித்தும், ஜேசிபி இயந்திரம் மூலம் மலர்களைத் தூவியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலை முடங்கியதில் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
இந்நிலையில், அனுமதி இன்றி கூட்டம் கூட்டியது, போக்குவரத்துக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தவெக-வை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.