Monday, February 3, 2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 10-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 10-ம் தேதி (திங்கட்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முக்கியமான திட்டங்கள் குறித்தும் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest news