ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. திமுக சார்பில் வி.சி சந்திர குமாரும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி மக்களைத்தவிர, பிரசாரத்துக்காக வெளியில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் இன்று மாலைக்குள் உடனே தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.