Thursday, March 13, 2025

🔴 LIVE UPDATE : 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்

  • 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
  • பாஜக 3வது முறையாக ஆட்சியமைத்தபின் தாக்கல் செய்யப்படும் 2வது பட்ஜெட் இதுவாகும்.
  • 1.7 கோடி விவசாயிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
  • பருப்பு உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தி திறன் குறைந்த 100 மாவட்டங்களில் தன் தான்யா கிரிஷி திட்டம்.
  • கிசான் கிரெடிட் கார்டுகளுக்கான வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • வேளாண்துறையில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  • உரம் உற்பத்தி – வருடத்திற்கு 12.7 லட்சம் டன் இலக்கு.
  • அஞ்சல் துறை மூலம் சரக்கு போக்குவரத்து மேற்கொள்ள நடவடிக்கை.
  • பட்டியலின பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ரூ.2 கோடி கடனுதவி வழங்கப்படும்.
  • AI தொழிநுட்பங்களுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு.
  • அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
  • Swiggy, Zomato ஊழியர்களுக்கு காப்பீடு திட்டம் மற்றும் அடையாள அட்டை : Swiggy, Zomato ஊழியர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்தால் அடையாள அட்டை வழங்கப்படும்.
  • 2047க்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் அணு மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு.
  • நாட்டில் புதிதாக 5 அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும்.
  • அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டில் முழுமையடையும்.
  • தோல் மற்றும் காலனி உற்பத்தி தொழித்துறையில் புதிதாக 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • உதயன் 2.0 திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்குள் 120 புதிய விமானங்கள் உருவாக்கப்படும்.
  • சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க ரூ. 20 ஆயிரம் கோடி முதலீடு.
  • விண்வெளி துறை வளர்ச்சிக்காக தேசிய அளவில் ஜியோ ஸ்பேஸ் உருவாக்கப்படும்.
  • நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் 40 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்.
  • 36 வகையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு.
Latest news