Thursday, December 25, 2025

சாலை பணியின் போது திடீரென வெடித்து சிதறிய சிலிண்டர்

சேலம் மாவட்டம், ஓமலூர் இருந்து சங்ககிரி வரை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சின்னப்பம்பட்டியில் இருந்து கொங்கணாபுரம் செல்லும் வழியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலைக்கு சாலையின் பக்கவாட்டில் வெள்ளைக்கோடுகள் வரைந்து கொண்டிருந்தனர்.

அப்போது வெள்ளைக்கோடுகள் வரைவதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் அனைவரும் உயிர் தப்பினர். அப்போது வாகனம் எதுவும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Related News

Latest News