Thursday, December 25, 2025

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : பாஜக பிரமுகர் போக்சோவில் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரி கிராமத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து(55). ஆலங்குளம் ஒன்றிய பாஜக விவசாய அணி முன்னாள் தலைவரான இவர் வட்டி தொழில் செய்து வருகிறார்.
அதே கிராமத்ததைச் சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு வட்டி வசூலிக்குச் சென்றபோது அங்கிருந்த 12 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சிறுமி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் வந்து சிறுமியை மீட்டனர். பேச்சிமுத்துவை வீட்டில் உள்ளேயே வைத்து பூட்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

Related News

Latest News