Wednesday, March 12, 2025

சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் திடீர் தீ : இருவர் பலி

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் நேற்று காலை சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரி டிரைவர் பீம் சிங் (56) மற்றும் அவரது உதவியாளர் விகாஸ் குமார் (20) இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயை அணைத்த பின், உடல்களை வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி உள்ளே இருந்து பூட்டப்பட்டதால், டிரைவர் மற்றும் உதவியாளர் வெளியே வர முடியாமல் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு ஷார்ட் சர்க்யூட் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

Latest news