Wednesday, February 5, 2025

செய்தியாளரிடம் அநாகரீகமாக பேசிவிட்டு சென்ற சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலியானது. அதனை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தார்.

இது தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர், “சீமான், பிரபாகரன் சந்திப்பு நடந்தது உண்மைதான். ஆனால், அது வெறும் 8 முதல் 10 நிமிட சந்திப்பு தான். இவர் சொல்வதுபோல், என் சித்தியுடன் (பிரபாகரனின் மனைவி) பழகியதெல்லாம் கிடையாது. சீமான் பிரபாகரனுடன் சேர்ந்து உணவு அருந்துவதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. சீமான் சொல்லும், ஆமைகறி, இட்லி கறி உள்ளிட்ட அனைத்தும் பொய்” என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

இதையடுத்து பிரபாகரனின் அண்ணன் மகன் சொன்ன குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி பெண் நிருபர் ஒருவர் சீமானிடம் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த சீமான், பிரபாகரனின் அண்ணன் மகனை மிகவும் தரக்குறைவான வார்த்தையில் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். பொது வெளியில் சீமான் அநாகரீகமாக பேசியது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Latest news