Friday, December 26, 2025

செல்போனை தரலைன்னா கொன்றுவிடுவேன் – தலைமை ஆசிரியரை மிரட்டிய மாணவன்

கேரளாவில் பாலக்காடு அனக்கராவில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் செல்போனை கொண்டு வரக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.

இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவன் ஒருவன் செல்போன் பயன்படுத்தியுள்ளான். இதனை கவனித்த ஆசிரியர் செல்போன் பயன்படுத்த கூடாது என கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதே மாணவன் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியுள்ளான்.

உடனடியாக செல்போனை பறிமுதல் செய்த ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் விவரத்தை கூறி ஒப்படைத்துள்ளார். இதையடுத்து, நேராக தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்ற மாணவன் செல்போனை திரும்ப தருமாறு கூறி உள்ளான். அவர் மறுக்கவே, கடுமையாக சத்தம் போட்டு கொன்று விடுவதாகவும் மிரட்டி இருக்கிறான்.

இது தொடர்பாக மாணவன் மீது புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பெயரில் போலீசார் மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News