Wednesday, March 12, 2025

கொல்கத்தா மருத்துவர் பாலியல் வழக்கு : குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்ற சமூக தன்னார்வலர் கைது செய்யபட்டார். இந்த வழக்கின் விசாரணையை கொல்கத்தா ஐகோர்ட்டு சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இன்று தண்டனை அறிவித்துள்ளது. அதன்படி குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள்தண்டனை விதித்து கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.

Latest news