Wednesday, February 5, 2025

பெண் மருத்துவர் பாலியல் வழக்கு : நீதிமன்றம் தீர்ப்பு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்ற சமூக தன்னார்வலர் கைது செய்யபட்டார். இந்த வழக்கின் விசாரணையை கொல்கத்தா ஐகோர்ட்டு சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரங்கள் வரும் ஜனவரி 20ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Latest news